மகளுக்கு பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த தாய்!! அவருக்கு உதவிய பாட்டி.!

1029

திருப்பதி: பிறந்தது பெண் குழந்தை என்பதால் பாலும் கிணற்றில் வீசி கொலை செய்த தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சின்னகொண்டிபூடியை சேர்ந்தவர் சதீஷ். சதீஷ் மனைவி ஸ்ரீஜனாவுக்கு 18 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் உடல்நலம் தேறி வீடு திரும்பிய ஸ்ரீஜனாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவருடைய தாயார் மகாலட்சுமி, பாட்டி கனகரத்னா ஆகியோர் ஸ்ரீஜனா மீது கோபம் அடைந்தனர். பெண் குழந்தை பிறந்தது தொடர்பாக ஸ்ரீஜனாவுக்கும் அவருடைய தாய் மகாலட்சுமி, பாட்டி கனகரத்தினா ஆகியோருக்கு இடையே தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் குழந்தையை கொலை செய்து விடுவது என்று திட்டம் தீட்டிய மூன்று பேரும் கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டுக்கு அருகில் உள்ள பாழும் கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்தனர். பின்னர் குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக அவர்கள் 3 பேரும் சேர்ந்து நாடகம் நடத்தினார்கள். குழந்தையை காணவில்லை என்று ஸ்ரீஜனா கணவர் சதீஸ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கிராம மக்கள் ஸ்ரீஜனா வீட்டுக்கு அருகில் இருக்கும் பாழும் கிணற்றில் குழந்தை பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்று குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விசாரணையை துவக்கினார்.


அப்போது ஸ்ரீஜனா, அவருடைய தாய் மகாலட்சுமி, பாட்டி கனகரத்தினா ஆகியோர் பெண் குழந்தை என்பதால் பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக 3 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தையை பெண்குழந்தை என்ற காரணத்திற்காக அந்த குழந்தையின் தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய மூன்று பெண்கள் சேர்ந்து கைது செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.