மதுபோதையில் விபரீதம்… வாஷிங்மெஷினில் சிக்கிக்கொண்ட பிரித்தானிய கல்லூரி மாணவி!!

438

பிரித்தானிய…….

பிரித்தானிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் தன் தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய நிலையில், நிதானத்தை இழந்து வாஷிங்மெஷினில் புகுந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

21 வயதான பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல் என்பவரே, தனது தோழிகளுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார்.

மது போதையால் நிதானத்தை இழந்த அவர், விளையாட்டாக வாஷிங்மெஷினில் புகுந்துள்ளார். ஆனால் அவர் அதற்குள் சிக்கிக்கொண்டார்.

உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.


ஆபத்தில் இருந்து மீண்ட மாணவி ரோஸி, இனிமேல் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட முயற்சிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். இருபது நிமிடங்களாக வாஷிங்மெஷினில் சிக்கிய அவர், தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ள வேல்ஸ் தீயணைப்பு வீரர்களுக்கான இணையதளம்,

தீயணைப்பு வீரர்கள் மரங்களில் இருந்து பூனைகளைக் காப்பாற்றுவார்கள். அவர்கள் வாஷிங்மெஷினில் இருந்து மாணவர்களையும் காப்பாற்றுவார்கள் என்று பல்கலைக்கழக மாணவி வேடிக்கையாக கூறியதாக தெரிவித்துள்ளது.