மதுவுக்கு அ டிமையான மனைவி:… நள்ளிரவில் கழுத்தை நெ ரித்த கணவன்- அதிர்ச்சி வாக்குமூலம்!!

998

மதுவுக்கு அடிமையான மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜ், இவரது மனைவி முருகவள்ளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முருகவள்ளி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், கணவன் மற்றும் குழந்தைகளை காணவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு கணவன் சண்முகராஜ் குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

ஊரடங்கு காரணமாக வெளியூர்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் நடந்தே தப்பிச்செல்ல முயன்ற சண்முகராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.


விசாரணையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டதில், தன்னுடைய மனைவிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தது. பக்கத்து வீட்டு பெண்களுடன் பேசி பழகிய போது, ஓட்கா அருந்தினால் அழகாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இதனால் ஓட்கா அருந்த தொடங்கிய முருகவள்ளி, ஒரு கட்டத்தில் அடிமையாகி போனதாக தெரிகிறது.

வீட்டு செலவுக்கு கொடுக்கும் பணம் போக, அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியும் குடிக்கத் தொடங்கியுள்ளார் முருகவள்ளி. இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜ் சண்டையிட, தினமும் தனக்கு மது குடிக்க பணம் தரவில்லையென்றால் இரவில் தூங்கும் போது தலையில் கல்லை போட்டு கொன்று விடப் போவதாக கணவனை மிரட்டியதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், குழந்தைகள் இருவரையும் உறவினர்கள் வீட்டில் விட்டு வந்த சண்முகராஜ், திங்கட்கிழமை மனைவிக்கு அவர் விருப்பபடியே ஓட்கா மது வாங்கி கொடுத்துள்ளார்.

முருகவள்ளி போதையில் அயர்ந்து தூங்கிய பின்னர் அரை போதையில் இருந்த சண்முகராஜ் “மனைவி நம்மை கொல்வதற்கு முன்பாக நாம் முந்திக் கொள்ள வேண்டும்” என்ற சிந்தனையில், மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாதி மாறி காதல் திருமணம் செய்ததால் முருகவள்ளியின் சடலத்தை கூட அவர்களது பெற்றோரும் வாங்க மறுத்துவிட்டார்களாம்.