மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டு கணவர் தப்பியோட்டம்!!

115

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்புளச்சேரியில் உள்ள மாங்கோடு பகவதி கோயில் அருகே உள்ள தனது வீட்டில் நேற்று காலை 6:30 மணியளவில் தேக்கஞ்சேரி சுனிதா என்ற 50 வயது பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

மலப்புரம் பொன்னானி பெரும்படப்பு பகுதியைச் சேர்ந்த சுனிதா என்பவர் சமீபத்தில் செர்புளச்சேரியில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினார்.

பலத்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற மகன், தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதைக் கண்டதாக தகவல்கள் தெரிவித்தன.

உடனடியாக மாங்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

மகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சுனிதாவின் கணவர் சத்யன் குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தலைமறைவான சத்யனைத் தேடும் பணி நடந்து வருகிறது. சுனிதாவின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக மாங்கோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.