மனைவியை உரசியதாக அறைந்த கணவர்.. தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

791

மகாராஷ்டிராவில்..

கன்சோலி பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் தினேஷ் ராதோட் (26). இவர் கடந்த 13ஆம் திகதி இரவு மும்பை சயான் ரயில் நிலையத்தின் நடைபாதையில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு நின்றிருந்த ஷீத்தல் மானே (30) என்ற பெண்ணை உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் குடையால் தினேஷை தாக்கியுள்ளார். அதைக் கண்ட பெண்ணின் கணவர் அவினாஷ் மானே (31) ஆத்திரத்தில் தினேஷ் ரத்தோடை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதில் நிலைதடுமாறி தினேஷ் ரதோட் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அப்போது வழித்தடத்தில் வந்த ரயில் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து ரயில்வே பொலிஸார்,


தினேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறுநாள் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார், தினேஷ் ரத்தோடை தாக்கிய தம்பதி அவினாஷ் மானே, ஷீத்தல் மானே ஆகியோரை கைது செய்தனர்.