மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு கணவன் விபரீத முடிவு!!

293

தெலங்கானாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை கள்ளக்காதலருக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் மன வருத்தத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலை பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் (28). எட்டு வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார்.

மூன்று பெண் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை அமைத்திருந்த அவர், ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வந்தார். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட அவர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், கவுஸ் மனைவிக்கு அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இது பின்னர் காதலாக மாறியது. இதை கவுஸ் அறிந்ததும், இளம் தம்பதியரை பிடித்து குடும்பத்தினரிடம் ஒப்புக்கொள்ள வைத்தார். பின்னர் பாரம்பரிய முறையில் தனது மனைவிக்கும் அந்த இளைஞருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இந்த சம்பவத்தால் மன அழுத்தத்தில் இருந்த கவுஸ், வீடு காலியாக இருந்த நேரத்தில் நண்பர்களுக்கு வீடியோ கால் மூலம் நிலையைக் கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் வந்து அவரது உடலை மீட்டு சத்திருப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் மறுமணமும் தந்தையின் தற்கொலையாலும் மூன்று சிறுமிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.