பேரிடர்களை பெரும் உபாயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கம் மிஷனரிகளுக்கு இருக்கிறது. நிலநடுக்கம், வெள்ளம், சுனாமி என இயற்கை பேரழிவுகளால் மக்கள் உணவு, உடை, உறைவிடம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் போது பரிதாபத்தையும் இரக்கத்தையும் ஏற்படுத்துவதை விட மிஷனரிகளின் கண்களுக்கு அது ஒரு சிறந்த வாய்பாகவே தெரியும். அதுதான் தற்போதும் நடக்கிறது. அப்படித் தான் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவுவதாகக் கூறி மதமாற்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழங்குடியினர் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இவ்வாறு ஊரடங்கு சூழ்நிலையை பயன்படுத்தி கட்டாய மதமாற்றம் செய்யும் மிஷனரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. ஹேமந்த் ஷோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்தே மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஊரடங்கு சமயத்தில் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறது.
மேலும், Opindia இணைய இதழிடம் ஒரு வருடத்திற்கு முன் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் அதைத் தவறு என்று உணர்ந்து இந்து மதம் திரும்ப விழைவதாகக் கூறும் காணொளியை விஹெச்பி பகிர்ந்துள்ளது.
விஹெச்பியின் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில பொறுப்பாளர், கேசவ் ராஜூ பகிர்ந்த இந்த காணொளியில், ஜாம்ஷெட்பூரில் மாவட்டத்தின் பராசுதி பகுதியில் உள்ள சோபோதேரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தாலி இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி ரமேஷ் ஹன்ஸ்டா, ஒரு வருடம் முன்பு எவ்வாறு தனது குடும்பம் ஒரு பாதிரியாரால் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டது என விளக்கியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மிக பலவீனமாக இருந்த தன்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றும் அந்த சமயத்தில் ஒரு பாதிரியார் அவரது வீட்டுக்கு வந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவுமாறு கூறி மனத்தை மாற்ற முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். நல்ல உணவு மற்றும் பணம் தருவதாகக் கூறி கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதாகவும் ஒரு சிறுவனை அனுப்பி ஒன்றரைக் கிலோ மாட்டிறைச்சியை வாங்கி வரச்சொல்லி அதை ரமேஷின் மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார். நாம் பார்ட்டி வைத்து கொண்டாடலாம் என்று பாதிரியார் கூறிய நிலையில் ரமேஷின் மனைவி மாட்டிறைச்சியை சமைக்க மறுத்து விட்டார்.
“என் மனைவி அவர்களுடன் பழக விருப்பமில்லாமல் வெகு தீவிரமாக மறுத்த பின் தான் அவர்கள் வெளியேறினர்” என்று ரமேஷ் கூறியுள்ளார். ரமேஷ் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ ஒப்புக்கொண்டால் பண உதவி செய்வதாக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக அந்த பாதிரியார் தொல்லை செய்ததாகவும் கூறியுள்ளார்.
வேறுவழியின்றி மதம் மாறிய ரமேஷுக்கு சில காலத்திற்கே உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அதுவும் பின்னர் நின்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவருக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்று கூறிய அவர், ஊரடங்கு காலகட்டத்தில் இரண்டு முறை அதுவும் குறைந்த அளவே உணவுப் பொருட்கள் தரப்பட்டதாகவும் அதன் பின் அதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் சர்ச்சுக்கு செல்வதில்லை என்றும் கிறித்தவ மதத்திலிருந்து விலகி இந்து மதத்திற்கு திரும்ப விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதனை அறிந்த ஜாம்ஷெட்பூர் மாவட்ட விஹெச்பி தலைவர் ஜனார்தன் பண்டிட் ரமேஷைத் தொடர்பு கொண்டுள்ளார். Opindiaவிடம் பேசிய ஜனார்தன் கூறியதாவது, ” ரமேஷின் குடும்பம் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழ்மையான வகுப்பைச் சேர்ந்தது. இதைப் பயன்படுத்தி உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரமேஷை மருத்துவ உதவி செய்வதாகக் கூறி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளனர்” என்றார்.
பாதிரியார்கள் வெகு காலமாகவே ரமேஷ் குடும்பத்தை மதம்மாற்ற முயற்சித்த போதும் அவர்கள் சர்ச்சுக்கு செல்லவில்லை என்றும், தற்போது மதம் மாறியதை விரும்பாத ரமேஷ் தாய் மதம் திரும்ப விழைவதாகவும் ஜனார்தன் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் பழங்குடியினர் நிறைந்த மாநிலமாக இருப்பதால் இத்தகைய மதமாற்ற நடவடிக்கைகள் பெருமளவில் நடப்பதாகக் கூறும் விஹெச்பி குமலா, லோஹரடகா, குந்தி, மேற்கு மற்றும் கிழக்கு சிங்பம் மாவட்டங்களில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது. மேலும், கிராமம் கிராமமாக செல்லும் சர்ச் ஏஜென்டுகள் இந்து மதத்திற்கு எதிராக விஷத்தைக் கக்குவதாகவும் குறிப்பிடுகிறது.
பணம் தருவதாகக் கூறி அப்பாவி பழங்குடியினரை ஏமாற்றி மதம் மாற்றூம் இந்த ஏஜன்டுகளைப் பற்றிய தரவுகளை சேகரித்து வருவதாகவும், அது தயாரான உடன் மாநில நிரவாகத்திடம் வழங்கி கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்ப்டும் எனவும் விஹெச்பி தலைவர் கேசவ் ராஜூ கூறியுள்ளார்.