மின்னல் வேகத்தில் வந்த கார் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!

690

சென்னை அருகே சாலை அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்களில் 5 பேர் சாலையோரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது.


இதில் தூக்கி வீசப்பட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் காரை சுற்றி வளைத்த அப்பகுதியில் இருந்த மக்கள், உள்ளே இருந்த நபர்களைப் பிடித்து சரமாரியாக தாக்கினர்.