மீன்பிடித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை..!

1114

இந்தோனேஷியாவில் பெண் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது மு தலை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.

பாத்திமா (45) என்ற அந்த பெண்ணின் அலறலைக் கேட்ட மக்கள் ஓடி வருவதற்குள் அந்த முதலை அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.

கண் முன்னே தங்கள் ஊர் பெண்ணை முதலை இ ழுத் துச் செல்வதை பார்த்தும் ஒன்றும் செய்ய இயலாமல் திகைத்து நின்றுள்ளனர் மக்கள்.என்றாலும், ஆத்திரம் அடங்காமல் மறு நாள் அந்த முதலையை பல மணி நேரம் வேட்டையாடிப் பிடித்துள்ளனர் அந்த கிராம மக்கள்.


அந்த 19 அடி நீள முதலையைப் பிடித்து, வாயைக்கட்டி வைத்துவிட்டு, அதன் வயிற்றைக் கிழித்துப் பார்க்கும்போது, அந்த முதலையின் வயிற்றுக்குள் பாத்திமாவின் கைகளும் கால் களும் இருப்பதைக் கண்டு அவற்றை அகற்றியுள்ளார் அக்கிராம மக்கள்.

பின்னர் வேறொரு இடத்தில் பாத்திமாவின் தலை மற்றும் பிற உடல் பாகங்களை முதலை கக்கிப் போட்டிருந்தது கண்டுபிடிக்க ப்பட்டது.பாத்திமாவின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.