முக கவசத்தை சரியாக அணியாத பெண்ணை தாக்கிய அன்னப்பறவை: ட்விட்டரில் வைரல்

1069

அன்னப்பறவை….

கொரோனா வைரஸை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

பொது இடங்களில் இவ்வகையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், முகக் கவசத்தை தாடைக்கு கீழே அணிந்திருந்த பெண் ஒருவர், பூங்காவில் நின்று கொண்டிருந்த அன்னப்பறவைக்கு ரசிக்கும் வண்ணம், அதனருகில் அமர்ந்திருந்தார்.


தன்னை தாக்க வருகிறார் என நினைத்த அன்னப்பறவை அவரது முக கவசத்தை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்தது. இதில் தாடைக்கு கிழே இருந்த முகக் கவசமானது, மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை மூடும் வண்ணம் சரியாக பொருந்தியது.

இந்த வீடியோவை ட்விட்டரில் ஒருவர் பகிர, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.