முதல் நாள் கல்யாணம் மறுநாள் மைத்துனருடன் ஓட்டம் பிடித்த மணமகள் பரபரப்பு வாக்குமூலம்!!

539

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹமீர்பூர் மாவட்டத்தில் விமரிசையாக திருமணம் ஒன்று நடைபெற்றது. திருமணமான 24 மணி நேரத்தில் மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தலைமறைவால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மே 17ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் 18ம் தேதி மணமகனின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதற்கு மறுநாள் மே 19ம் தேதி இரவு, மணமகள் தனது மைத்துனரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அந்த சமயத்தில் மணமகன் வெற்றிலை வாங்க வெளியே சென்றிருந்தாக உறவினர்கள் கூறுகின்றனர். அதற்குள் மணமகள் மைத்துனருடன் காரில் ஏறி தப்பியோடியுள்ளார். அதற்கு அவரது நண்பர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மணமகனின் தந்தை அந்த பெண் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அணிந்திருந்தார். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து மணமகளை மைத்துனரின் வீட்டிலிருந்து மீட்டனர்.

இதுகுறித்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது மாமியார் தன்னை குற்றம் கூறி, அடித்ததாகவும், வரதட்சணை குறைவாக கொண்டு வந்ததற்காக தன்னை தகாத வார்த்தைகளால் சிறுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.


போலீசார் இருதரப்பினரிடமும் சந்தித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மைத்துனரையும் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி அழைத்திருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.