முன்னாள் காதலன் வீட்டில் தங்கியிருந்த மனைவி : கணவன் செய்த வெறிச்செயல்!!

29354

புனே..

முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.

புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட். இப்பகுதியை சேர்ந்தவர் சச்சின் வாலே. இவரது மனைவி அஸ்வினி(வயது25). இவர்களது திருமண வாழ்க்கையில் அஸ்வினிக்கு அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. முன்னாள் காதலனை அவர் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

சில மாதங்களாக முன்னாள் காதலனுடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். கணவனுக்கு தெரியாமல் முன்னாள் காதலனுடன் கள்ள உறவு வைத்து வந்திருக்கிறார்.


இந்த விவகாரம் கணவருக்கும் வீட்டாருக்கும் தெரிய வந்திருக்கிறது . அவர்கள் இந்த உறவு வேண்டாம் என்று கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அஸ்வினி தனது கணவர் சச்சின் வாலேவை விட்டுப் பிரிந்து சென்று முன்னாள் காதலர் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.

இதை அறிந்த சச்சின் வாலே, தனது மனைவியைத் தன்னிடம் சேர்த்து வைக்குமாறு போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார். புகாரையடுத்து அஸ்வினியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுத்து கணவருடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்த அஸ்வினியும் சச்சின் வாலேவும் இரவு படுத்து தூங்கி இருக்கிறார்கள்.

அப்போது இருவருக்கும் இடையே பழைய பிரச்சினைகள் தொடர்பாக வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதில் சச்சின் வாலே கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அப்போது அவர் எதுவும் செய்யவில்லை. அதிகாலை 5 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த அஸ்வினியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஸ்வினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் வாலேவை கைது செய்துள்ளனர்.