முன்னாள் தேசிய வீராங்கனை மனு, வகுப்பறையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம், தெங்கனா குட் ஷெப்பர்ட் பள்ளியின் விளையாட்டு ஆசிரியையும், முன்னாள் தேசிய வீராங்கனையுமான மனு ஜான் (50),
தான் பணிபுரிந்து வந்த பள்ளியில் பணியில் இருந்த போது மாணவிகள் மத்தியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேசியளவில் கேரளாவுக்காக பல விருதுகளை வென்றுள்ள மனு, எம்ஜி பல்கலைக்கழக கிராஸ்-கன்ட்ரி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
மனு தனது களத்தில் உச்சக்கட்டத்தில் இருந்த போது, முன்னாள் பல்கலைக்கழக பயிற்சியாளர் பி.வி.வெல்சியின் கீழ் அஞ்சு பாபி ஜார்ஜ், அஜித் குமார், சாக்கோ மற்றும் சினிமோளிடம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.