மைத்துனியை உல்லாசத்திற்கு அழைத்த அண்ணன் ஆத்திரத்தில் சாக்கு மூட்டையில் பொட்டலம் போட்ட தம்பி!!

177

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (30). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

திருமணமாகாத மூர்த்தியின் அண்ணன் பாபு (32), கோவையில் கட்டிட வேலை செய்து வந்தார். கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் செல்லும் பாபு, தனது தம்பி மனைவி மஞ்சுளா மீது காம பார்வையை வீசி உல்லாசத்திற்கு அழைத்தார்.

இதுகுறித்து கணவர் மூர்த்தியிடம் மஞ்சுளா கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகளை அழைத்தைக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்த வருத்தத்தில் இருந்த மூர்த்தி, இதற்கெல்லாம் காரணம் தனது அண்ணன் பாபுதான் என எண்ணி அவரிடம் தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, அண்ணன் பாபுவை சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் பாபுவை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளார்.

உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் பாபுவின் உடல் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. பின்னர், அண்ணனை கொன்ற தம்பி மூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.