சென்னை…

சென்னை அடுத்த ஆவடி திருவமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 35). இவர் சென்னை பரங்கிமலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீபிரியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் தாயாருடன் வசித்து வந்த நிலையில் அவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஆவடி ரயில் நிலைய நடைமேடையில் இருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னை நோக்கி வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

ரயில் மோதியதில் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே பயணிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ஆவடி ரயில்வே போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எக்ஸ்பிரஸ் ரயில் மீது பாய்ந்ததை சில பயணிகள் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

எனவே அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பணியிடத்தில இடத்தில் ஏதேனும் நெருக்கடி இருந்ததா? அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து,

தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில் முன்பு பாய்ந்து பெண் போலீஸ் தற்கொலை செய்த சம்பவம் ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















