ரீல்ஸ் மோகம்.. கோயிலுக்குள் இரு பெண்கள் செய்த செயலால் நேர்ந்த பரிதாபம்!!

545

மத்தியப் பிரதேசத்தில்..

சமூக வலைதளங்களில் இன்றைய தலைமுறையினர் அதிக நேரம் செலுத்துக்கின்றனர். அதிலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்றால் அதில் மூழ்கி விடுகின்றனர்.

ரீல்ஸ் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன. இந்த நிலையில் ரீல்ஸ் மோகத்தால் இரு பெண்கள் வேலையை இழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு படையில் உள்ள பெண்கள் இருவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.


கோவில்கள் புனித தலமாக கருதப்படுகிறது.அதற்கு இழுக்கு விளைவிக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது. அதேபோல் சில கோவில்களில் போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

உஜ்ஜைன் கோவிலில் நின்று கொண்டு சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜைன் ADM சந்தோஷ் தாகூர் மற்றும் மகாகல் கோவில் நிர்வாகி சந்தீப் சோனி அந்த இரண்டு பெண் பாதுகாப்பு பணியாளர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்கினர்.

இதுகுறித்து உஜ்ஜைன் ADM சந்தோஷ் தாகூர் கூறியதாவது, மகாகால் கோயிலில் பணிபுரிபவர்கள் நடன வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து ஊடகங்களில் செய்திகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.