ரூ.491 கோடி செலவு… அமெரிக்க இளம் ஜோடிக்கு அரண்மனையில் நடந்த ஆடம்பர திருமணம்!!

494

அமெரிக்கா….

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த மணப்பெண் மெடலைன் ப்ரோக்வே முன்னணி தொழில் முனைவோரில் ஒருவராக இருந்து வருகிறார்.

இவரது குடும்பமே செல்வ செழிப்பில் நிறைந்தது, மணப்பெண் மெடலைன் ப்ரோக்வே-வின் தந்தை ராபர்ட் பாப் ப்ரோக்வே, இவர் பில் உஸ்லேரி மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தனது மகள் மெடலைன் ப்ரோக்வே-வின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தந்தை ராபர்ட் பாப் ப்ரோக்வே திட்டமிட்டுள்ளார். இதற்காக பாரிஸில் உள்ள புகழ்பெற்ற வெர்சாய்ஸ் அரண்மனையின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்த தந்தை ராபர்ட் பாப் ப்ரோக்வே, அரண்மனை முழுவதும் பல்வேறு வண்ண பூக்களால் அலங்கரித்துள்ளார்.


அத்துடன் மணமகள் மெடலைன் ப்ரோக்வே மற்றும் மணமகன் ஜேக்கப் லாக்ரோன் திருமணத்தில் கலந்து கொள்ள வரும் விருந்தினர்களை தனி விமானம் மூலம் பாரிஸ் நகருக்கு அழைத்து வந்துள்ளார்.

மேலும் உலகின் பிரபலமான இசைக்குழுவான மரூன் 5ன் இசை நிகழ்ச்சி என ஒட்டுமொத்த திருமணத்தையும் மிகவும் பிரம்மாண்டமாக ராபர்ட் பாப் நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரம் நடைபெற்ற மெடலைன் ப்ரோக்வே-ஜேக்கப் லாக்ரோன் திருமணத்தில் மணமக்கள் கண்கவரும் ஆடைகளை அணிந்து தோற்றமளித்தனர்.

இவ்வாறு பல பிரம்மாண்டங்களுடன் சுமார் 491 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட மெடலைன் ப்ரோக்வே-ஜேக்கப் லாக்ரோன் திருமணம் கடந்த 18ம் திகதி கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது.