லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த பெண் யார் என கண்டுபிடிப்பு! முதல் முறையாக வெளியான புகைப்படம்!

988

லண்டனில் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Lewisham-ல் இருக்கும் குடியிருப்பில், கடந்த 10-ஆம் திகதி பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குறித்த பெண், உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 16-ஆம் திகதி உயிரிழந்தார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த 10-ஆம் திகதி புதன் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 21.00 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததால், உடனடியாக அங்கு விரைந்த போது 58 வயது மதிக்கத்தக்க Dawn Bennett என்ற பெண் கத்தி குத்து காயங்களுடன் கிடந்தார்.


இதையடுத்து, அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய பிறந்த நாளான கடந்த 16-ஆம் திகதி அவருடைய 59 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Dawn Bennett
அவருடைய மரணத்திற்கு முக்கிய காரணம் மார்பில் வெட்டப்பட்ட காயம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், 31 வயது மதிக்கத்தக்க நபர் கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரை தாக்கியது ஏன்? என்ன காரணம் என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.