லண்டனுக்கு தப்பியோடிய இந்திய கோடீஸ்வரர்! பதுக்கிய ரூ.1300 கோடி மதிப்பிலான வைரங்கள்…

1206

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடி அங்கு கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி ஹாங்காங்கில் முன்னர் பதுக்கி வைத்திருந்த ரூ.1350 கோடி மதிப்புள்ள வைரம், முத்துக்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

13,000 கோடி ரூபாய் மதிப்பிலான PNB ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி, தனது மோசடி குறித்து செய்திகள் வெளியான பின்பு நாட்டை விட்டு லண்டனுக்கு தப்பியோடினார்.

உடன் அவரின் உறவினர் மெலுக் சோஸியும் ஓடினார்.

இந்த நிலையில் லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவின்படி வங்கி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் ஹாங்காங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.1350 கோடி மதிப்புள்ள வைரம், முத்துக்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு மும்பைக்கு கொண்டுவரப்பட்டன.

ஏற்கனவே துபாய் மற்றும் ஹாங்காங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.137 கோடி மதிப்புள்ள நகைகள் இந்தியா கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அமலாக்கத்துறையினர் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.