லெஸ்பியன் உறவால் குழந்தையைக் கொன்ற தாயும், தோழியும்!!

191

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மாத குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது பெண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை பால் குடிக்கும் போது உடல்நலம் பாதித்து இறந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் தந்தை கொலை சந்தேகத்தைக் கூறியதைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இடம்பெற்றது. சில நாட்களுக்கு முன்பு குழந்தை திடீரென உயிரிழந்ததால்,

இயற்கை காரணமென நம்பப்பட்டு, போலீசார் மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்து குடும்பத்தினருக்கு விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தனர்.

ஆனால், குழந்தையின் தந்தைக்கு சந்தேகம் எழுந்ததால் போலீசில் புகார் அளித்தார். தனது மனைவிக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையே நெருக்கம் இருப்பது தொடர்பான புகைப்படங்கள்,

வீடியோக்கள் மற்றும் தகவல்களை போலீசுக்கு வழங்கிய அவர், “இந்த உறவு காரணமாக குழந்தைக்கு தீங்கு ஏற்பட்டிருக்கலாம்” என தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மறுபடியும் பிரேத பரிசோதனை நடத்தினர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் குழந்தை உடல்நலக் கோளாறால் அல்ல, நெஞ்சழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாய் மற்றும் அவரது பெண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.


விசாரணையில் தாய் குழந்தையை விரும்பவில்லை என்றும், கணவர் தன்னை கவனிக்கவில்லை என்றும், குடும்ப உறவில் பிரச்சனைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மனைவியின் நெருக்கமான பெண் தோழியும் சம்பவத்தில் பங்குள்ளதென போலீசார் தெரிவித்தனர்.

தாய் மற்றும் அவரது நண்பர் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். தந்தை வழங்கிய மின்னணு ஆதாரங்கள் போலீசால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், குற்றம் புரிந்த சூழ்நிலை மற்றும் மனநிலை தொடர்பாக கூடுதல் ஆய்வுகள் நடத்தப்படுமென போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கிரஷ்ணகிரி பகுதிகளில் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.