வளர்ப்பு நாயால் காப்பாற்றப்பட்ட 4 மனித உயிர்கள்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

116

இலங்கையின் களுத்துறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயால் குடும்பத்தில் உள்ள 4 பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையில் பல இடங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அதையடுத்து மண்சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது. இதனால் பல மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உடைமைகளையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் களுத்துறை, அகலவத்த – பெல்லன பிரதேசத்தில் வசிக்கும் ஓர் குடும்பத்தில் விதானலகே சோமசிறி என்பவர்கள் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

அதாவது வழக்கத்தினை விட அதிக சத்தத்துடன் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் வீட்டின் பின்புறம் நின்று குரைத்துக்கொண்டிருந்தது.

குடும்ப தலைவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்வையிட்டுள்ளார்.


அதன்போது, நாய் தன்னிடம் ஏதோ கூறுவதை போன்று உணர்ந்து தாய், தந்தை மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்புறம் இருந்த மலை முழுவதுமாக இடிந்து வீட்டின் மீது விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தனது வீட்டின் வளர்ப்பு நாயான களுவினால் தங்களது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.