பூனையால்..

சிலருக்கு தூங்கும் போதும், படுக்கையில் அருகிலேயே தங்களது செல்ல வளர்ப்பு பிராணிகள் படுக்க வேண்டும். அது நாயோ, பூனையோ.. ஒரே படுக்கை என்பதில் துவங்கி, உரசியபடியே தான் எப்போதும் இருப்பார்கள். காலை அலுவலகத்தில் கிளம்பி செல்ல கூட இந்த செல்லப் பிராணிகள், தங்களுக்கு பிரிமானவர்களை அனுமதிப்பதில்லை.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தாங்கள் வளர்த்த செல்ல பிராணியால் தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தந்தை, மகன் என இருவரும் செல்லமாக பூனையை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது செல்ல பூனையை கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.
அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருந்துள்ளது. இதன் மூலமாக பூனைக்கும் ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தந்தையும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசம் கான்பூர் தேஹாட்டின் அக்பர்பூர் நகரை சேர்ந்தவர் தேஜாஸ் இவரது மகன் அங்கத் இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது வீட்டில் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூனையுடன் விளையாடுவதும் அதற்கு உணவளிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தெருநாய் ஒன்று பூனையை கடித்ததால் அடுத்த சில நாட்களில் வெறிநாய்க்கடியின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது. இதனை குடும்பத்தினர் யாரு கண்டுக்கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் பூனையுடன் அங்கத் விளையாடிக் கொண்டிருந்தபோது, பூனை கீறியுள்ளது. இந்த நிலையில் அந்த அங்கத்தின் உடல் நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியுள்ளது.

பூனையின் அறிகுறிகள் அந்த அங்கத்திடம் தோன்றத் தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார்.
அவருக்கும் ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரேபிஸ் நோயால் தந்தை மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















