வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கை முந்தியது டிக்டாக்!!

1024

குறைவான மொபைல் விலைகளின் காரணமாகவும் மற்றும் அதிகமான ஸ்மார்ட்போன்களின் வருகையின் காரணமாகவும் இந்தியாவில் புதிய இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது. இந்த காரணங்களால் குறிப்பாக கிராமப்புறங்களில் இந்தியாவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. கிராமப்புற இந்தியாவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஊடகங்கள் மற்றும்  இணைய சேவை பயன்பாடுகளும் அதிகரித்துள்ளன. பயனர்களின் எண்ணிக்கையில் தவிர்க்க முடியாத அதிகரிப்பின் காரணமாக பல செயலிகள் மற்றும் தளங்களின் பயன்பாடுகளும் அதிகமாகி உள்ளது.

அது போன்ற செயலிகளில் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக் மற்றும் பலவும் உள்ளடங்கியுள்ளது. எண்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும், ஒரு புதிய அறிக்கை ஆன்லைனில் சரியான எண்களை முன்னிலைப்படுத்தியுள்ளது. கிராமப்புற இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகளின் பயன்பாட்டு விவரங்களை இங்கே பார்ப்போம்.

கிராமப்புற இந்தியாவில் வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் பேஸ்புக் பயன்பாடு தொடர்பான விவரங்கள்

தி எகனாமிக் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, காந்தர் எனும் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியா முழுவதும் இணைய பயன்பாட்டிற்கான தரவுகளை சேகரித்தது. தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வின் ஒரு பகுதியாக, சந்தையில் சில சுவாரஸ்யமான இணைய பயன்பாட்டு முறைகளை நிறுவனம் கண்டறிந்தது. கிராமப்புற இந்தியாவில் மொத்த இணைய பயனர்களில் பெண்கள் 41 சதவிகிதம் உள்ளனர் என்று அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு மாறாக, நகர்ப்புற இந்தியாவில் மொத்த பயனர்களில் 43 சதவீதம் பெண்கள் உள்ளனர். கிராமப்புற பயனர்களில் 89 சதவீதம் பேர் தினசரி இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், 88 சதவீதம் பேர் ஒவ்வொரு நாளும் நகர்ப்புற அமைப்பில் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமெனில், 19 சதவீத பயனர்கள் மட்டுமே இந்தியா முழுவதும் இணையத்தை அணுக PC யைப் பயன்படுத்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இதைத் தாண்டி, இணைய பயனர்களில் பெரும்பான்மையானவர்கள் 15 முதல் 34 வயதானோராக உள்ளனர். கிராமப்புற இணைய பயனர்கள் ஆன்லைனில் அதிகம் எதுவும் செய்யவில்லை என்றாலும், நீண்ட நேரம் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிட்டது.