பாபு சிவன்…

தளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘வேட்டைக்காரன்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளது திரையுலகில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த வேட்டைக்காரன் என்ற திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பாபு சிவன் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’குருவி’ மற்றும் ’பைரவா’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாபு சிவன் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனையடுத்து திரையுலக பிரமுகர்கள் அவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பட இயக்குனர் ஒருவர் திடீரென காலமானது கோலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















