விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்க்கு நேர்ந்த பரிதாபம் : கருகிய கார்.. நடந்த விபரீதம்!!

896

ரிஷப் பண்ட்..

உத்தரகாண்ட அருகே சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர் ரிஷ்ப் பண்ட்.

தனது அதிரடி ஆட்டத்தால் தனக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்டு ரிஷப் பண்ட் இந்தியா திருப்பினார்.

இதையடுத்து அவர் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். இதையடுத்து ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த தடுப்பில் மோதியது.


இதனால் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ரிஷப் பண்டை மீட்டுள்ளனர்.

பிறகு அவரை அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதாலேயே ரிஷப் பண்ட் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் அவருக்குத் தலை மற்றும் காலில் பலத்த தாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் ரிஷப் பண்ட் மட்டுமே இருந்ததும், தூக்கமின்மையால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.