வியன்னா தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவன் இவன்தான்: முதன்முறையாக புகைப்படங்கள்!!

420

ஆஸ்திரிய……….

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவிலுள்ள தேவலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தி நான்கு பேர் பலியாக காரணமாக இருந்த நபரின் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

Kujtim Fejzulai (20) என்ற அந்த நபர், காலை 8 மணிக்கு தேவாலயத்தில் தனது தாக்குதலைத் துவக்கியுள்ளான். ஒரு தானியங்கித் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு பட்டாக்கத்தியுடன் வெறியாட்டத்தில் இறங்கிய அவன், கண்ணில் பட்ட அனைவரையும் தாக்கியவாறே சாலையில் நடந்துள்ளான்.

அவன் தாக்கியதில், முதியவர் ஒருவர், பெண்மணி ஒருவர், இளைஞர் ஒருவர் மற்றும்உணவகத்தில் பணிசெய்யும் இளம்பெண் ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 28 வயது பொலிசார் ஒருவரும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவர் உயிர் தப்பிவிட்டார். இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளனர்

Fejzulai தாக்குதல் நடத்தியதில், மொத்தம் 22 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பின்னர் Fejzulai பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.


இந்நிலையில், Fejzulaiயைக் குறித்த மற்றொரு முக்கிய தகவலை ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் Karl Nehammer வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக சிரியா செல்ல முயன்றதற்காக Fejzulai கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளான்.

தீவிரவாத செயல்களுக்காக கைது செய்யப்படுவோர், தங்கள் தீவிரவாத எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்காக, அவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் வழக்கம் பிரித்தானியா உட்பட சில நாடுகளில் உள்ளது.

19 வயதில் பிடிபட்ட Fejzulaiயும், அதேபோல் வகுப்புகளுக்கு சென்றுள்ளான். இனி இவனால் நாட்டுக்கு எந்த பாயமும் இல்லை என மக்களை நம்பவைக்கும் அளவுக்கு மாற்றங்கள் காட்டிய அவனை முன்னதாகவே சிறையிலிருந்து விடுவித்துள்ளனர் அதிகாரிகள்.

ஆனால், உண்மையில் மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அந்த வகுப்புகளில் Fejzulai சேர்ந்துள்ளான் என்று கூறும் Nehammer, அவன் நீதித்துறையையும், மக்களையும் ஏமாற்றியுள்ளான் என்று கூறியுள்ளார்.