விவாகரத்து செய்த கணவனை நம்பி அவர் வீட்டுக்கு சென்ற மனைவி! அங்கு போய் பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

989

இந்தியாவில் விவாகரத்து செய்த மனைவியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விதர் சிங். இவர் மகள் மஞ்சிதர் கவுர் (26). மஞ்சிதரும், ககந்தீப் என்பவரும் காதலித்து கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் மதுவுக்கு அடிமையான கனந்தீப் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.

இதையடுத்து ஓராண்டுக்கு முன்னர் மஞ்சிதர் தனது கணவர் ககந்தீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பின்னர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தபடி தந்தையுடன் வசித்து வந்தார் மஞ்சிதர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மஞ்சிதர் பணிபுரியும் இடத்துக்கு வந்த ககந்தீப் தன்னுடன் வருமாறு அவரை அழைத்துள்ளார். இதையடுத்து மஞ்சிதரும் ககந்தீப்பை நம்பி அவருடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.


அங்கு மஞ்சிதரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த ககந்தீப் பின்னர் தப்பியோடியுள்ளார். இதனிடையில், மஞ்சிதர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர், மஞ்சிதரின் தந்தை ஜஸ்விதருக்கு போன் செய்து உங்கள் மகளை ககந்தீப் அழைத்து சென்றார் என கூறினார்.

இதை கேட்டு பதறிய ஜஸ்விதர், ககந்தீப் வீட்டுக்கு சென்ற போது அங்கு தனது மகள் இரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த சடலத்தை கைப்பற்றினார்கள். விசாரணையில், மஞ்சிதருக்கு இரண்டாம் திருமணம் செய்ய தந்தை முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த ககந்தீப், மஞ்சிதரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள ககந்தீப்பை பொலிசார் தேடி வருகின்றனர்.