வீடியோ எடுத்தபடியே பைக் ரைடு…. 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்!!

568

திருவள்ளூர்…..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதம் பரபரப்பாக வாகனங்கள் சென்றுக்கொண்டே இருக்கும் இந்த நிலையில், அதேபகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி வேகமாக சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் முன் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

தொடர்ந்து வளைவில் அவர்கள் முந்தியபோது, விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், பைக்கில் சென்ற 3 பேரும் சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக பைக் சென்றதால் அடித்துசெல்லப்பட்டு படுகாயம் அடைந்து மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தயாளன் (19), சார்லஸ் (21), ஜான் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.