கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த நடவடிக்கை இன்று (14) செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கவனத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.