சிங்கப்பூரில்…….

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேந்த கணவன் மனைவியை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகள் சிறை தணனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் கிருஷ்ணன் ராஜூ. 53 வயதான இவர், ஓடுனராக உள்ளார். சொந்த பஸ் மூலம் சுற்றுலா தலங்களுக்கு பயணியரை அழைத்துச் செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார்.

இவருக்கு தன் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்தவர் ஒரு நாள் குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கில் கிருஷ்ணன் ராஜூவுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நீதிபதி தன் தீர்ப்பில், கிருஷ்ணன் ராஜூ 17 வயது பெண்ணை திருமணம் செய்து 28 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளார். அவருக்கு எதையும் சந்தேகத்தோடு பார்க்கும் பாதிப்பு இருப்பதை மருத்துவ அறிக்கைகள் நிருபிக்கின்றன.
அவர் குடிபோதையில் மனைவியை கொலை செய்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார். பொலிசில் தானே சரணடைந்துள்ளார்.

எனவே 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.















