வேறொரு பெண்ணுடன் கணவரின் ‘ரகசிய’ குடும்பம் : கிழித்து தொங்க விட்ட மனைவி!!

582

தெலங்கானா..

தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு, கம்மம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பானு பிரகாஷின் திருமணத்தின் போது, அவருக்கு வரதட்சணையாக சுமார் 9 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகையும், 20 லட்ச ரூபாய் பணமும் பெண் வீட்டார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணமாகி சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கடந்த சில மாதங்களாக பானு பிரகாஷிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அடிக்கடி இருவரும் சண்டை போட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக, தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவினை பானு பிரகாஷ் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நீதி மன்றத்தில் பானு பிரகாஷ் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இதற்கான வழக்கும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில ஆண்டுகளாக, சூர்யாபேட்டையில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, அவருடன் ரகசியமாக பானு பிரகாஷ் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.


இது பற்றி மற்ற சிலருக்கு தகவல் தெரிய வர, பானு பிரகாஷின் மனைவி காதுக்கும் எட்டியுள்ளது. ஏற்கனவே கணவனுடன் அடிக்கடி தகராறு இருந்து வந்ததால் ஆத்திரத்தில் இருந்த அவர், தனது கணவரின் இளம்பெண்ணுடனான ரகசிய உறவு பற்றி தெரிய வந்ததும், இன்னும் கோபம் அடைந்துள்ளார். தொடர்ந்து, உறவினர்களை அழைத்துக் கொண்டு, இளம்பெண்ணுடன் பானு பிரகாஷ் வசிக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார் அவரின் மனைவி.

அங்கு சென்றவர், கணவரையும் அவரின் இரண்டாவது மனைவியையும் வெளியே அழைத்து வந்து, உறவினர்களுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால், அந்த இடமே கடும் பரபரப்புடன் காணப்பட்டது. கடைசியில், விவகாரம் பெரிதான நிலையில், பானு பிரகாஷ் மற்றும் அவரின் இரண்டாவது மனைவி மீது போலீசில் புகாரையும் அளித்துள்ளார்.

விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பானு பிரகாஷ் வேறொரு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

அதே போல, அவரின் மனைவி பெயரில் இருந்த இரண்டு வீடுகளையும் தன்னுடைய பெயரில் பானு பிரகாஷ் நைசாக பேசி மாற்றிக் கொண்டதாகவும், தன்னுடைய புகாரில் அவரின் மனைவி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் பானு பிரகாஷின் மனைவி, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கதறியதாகவும் தெரிகிறது.