ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வீட்டைப் போல் உருவாகும் தளபதி விஜய்யின் புதிய வீடு.. 100 கோடி செலவுன்னா சும்மாவா!

921

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். படத்துக்கு படம் இவரது ரசிகர் பட்டாளத்துடன் சேர்த்து வசூலும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

சமீபத்தில் வெளிவந்த பிகில் படம் 300 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.

தளபதி விஜய் தற்போது தனது நீலாங்கரை வீட்டை மாற்றி அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன வசதிகளுடன் கூடிய அந்த வீட்டில் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், லேசர் போன்ற நவீன தொழில் நுட்ப அமைப்புகள் அனைத்தும் இடம்பெற உள்ளதாம்.


தளபதி விஜய் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என்பவரின் மிகப்பெரிய ரசிகராம். தற்போது கட்டிவரும் வீட்டை டாம் க்ரூஸ் வீட்டைப் போலவே கட்ட வேண்டுமென முடிவெடுத்து அதன்படி வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

தற்போது வரை அந்த வீட்டிற்கு 100 கோடி செலவு செய்துள்ளாராம். இன்னும் எஞ்சிய வேலைகள் பல பாக்கி உள்ள நிலையில் சில பல கோடிகள் இன்னும் செலவாகும் எனவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

என்னதான் தனக்கு ஆடம்பரமாக செலவு செய்து கொண்டாலும் ஏதாவது ஒரு பிரச்சனை, உதவி தேவைப்பட்டாலும் யோசிக்காமல் கொடுத்து உதவுவர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. தல அஜித் சொல்வதைப் போல் எண்ணம் போல் வாழ்க்கை இருந்தால் யாரும் உயரலாம் என்பதற்கு விஜய்யும் ஒரு எடுத்துக்காட்டு தான்.