“ஹைய்யா ஜாலி ஜாலி‌..” தாலி கட்டும்போது மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த மணப்பெண்!!

2446

கல்யாணம்..

மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது. அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள்.

இதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் புது ஜோடிகளாக மாற போகிறவர்கள் பார்த்து பார்த்து செய்வார்கள். தங்களின் வாழ்நாள் முழுவதும் திருமண நாள் மிக முக்கியமான தருணமாக நினைவிருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் மனதில் இருக்கும்.

அந்த வகையில், தற்போது மணப்பெண் ஒருவர் தனது திருமண நாளை இன்னும் அழகாக்க, தாலி கட்டும் நேரத்தில் செய்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் ஒரு பகுதியில் இந்த திருமணம் நடந்துள்ள நிலையில், மாப்பிள்ளை தாலியை எடுத்துக் கொண்டு மணமகளின் கழுத்திற்கு அருகே சென்றதும் குழந்தை போலவே உற்சாகம் அடைந்து விடுகிறார் அந்த பெண்.

அது மட்டுமில்லாமல், அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் கத்தி கூச்சல் போட்டு திருமணத்தை கொண்டாட, மறுபக்கம் கல்யாண பொண்ணும் தனக்கு திருமணம் ஆனதால் கத்திய படியே, கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நண்பர்கள் கத்திக் கொண்டே திருமணத்தை கொண்டாடிய படி இருக்க, மாப்பிள்ளை தாலி கட்டி முடிப்பது வரை மணப்பெண்ணின் முகத்தில் ஆனந்தம் மட்டும் தான் நிரம்பி இருந்ததை காண முடிந்தது. இறுதியில், தாலி கட்டி முடித்த பின், தனது கணவரை கட்டியணைத்த படி முத்தமும் கொடுக்கிறார் மணப்பெண்.

தனக்கு திருமணமான சமயத்தில், குழந்தை போல மாறி, கைதட்டி கொண்டாடிய மணப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here