வேலூர்…….

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்(21). இவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வரும் அப்பெண், பக்கத்து ஊர்க்காரர் என நம்பி, சரத்குமாருக்கு மொபைல் நம்பரை பகிர்ந்துள்ளார்.

இதன்பின்னர், சொந்த கிராமத்துக்கு அந்த நர்ஸ் பெண் வந்திருந்துள்ளார். அதை அறிந்த சரத்குமார், அப்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான பதிவுகளைப் பதிவிட்டு, உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நர்ஸ் பெண், சரத்குமாரை எச்சரித்ததுடன், தொடர்பையும் நிறுத்திக் கொண்டார்.

உடனே ஆத்திரமடைந்த சரத்குமார், அந்த நர்ஸ் பெண்ணின் போட்டோவை ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து அப்பெண்ணின் வாட்ஸ்ஆப்பிற்கு அனுப்பியுள்ளார்.
அப்போது, அந்த போட்டோக்களை சமூக ஊடகங்களில் பகிராமல் இருக்க 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரத்குமார் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்த நர்ஸ், தன் பெற்றோரிடம் கூறி அழுததுடன், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.















