அடக்கருமமே.. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே சுய இன்பம்.. இளைஞனுக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி!!

884

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் அதிரா புருஷோத்தமன். இவர் ஜூலை 21ம் தேதி டவுன் ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக் சென்றிருந்தார்.

போராட்டம் முடிவடைந்ததும் அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் செயலியில் குறிப்பிட்ட பைக் இல்லாமல் வேறு ஒரு பைக்கில் ஒருவர் வந்திருந்தார்.

பதிவு செய்ததை உறுதி செய்த பிறகு ரேபிடோ டாக்சியில் அதிரா ஏறினார். ஆள் நடமாற்றம் இல்லாத பகுதியில் ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டே அந்த பைக் டாக்சியின் ஓட்டுநர் சுய இன்பம் செய்ய தொடங்கி இருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்த அதிரா, பயந்து போய் எதுவும் சொல்லாமல் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் குறிப்பிட்ட இடம் வருவதற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே அதிரா இறங்கிவிட்டார்.


அதன் பிறகும் அதிராவுக்கு இரவு முழுவதும் ஆபாச மெசேஜ்களை அந்த ஓட்டுநர் அனுப்பியுக் கொண்டே இருந்தார். ஹார்ட், முத்தம் என பல இமோஜிகளை அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிரா இது குறித்து ரேபிடோ நிறுவனத்திற்கு இது குறித்து புகார் எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

ரேபிடோ ஓட்டுநர் தனக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்களை பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுகளை கவனித்த பெங்களூரு மாநகர போலீசார், அடுத்து அதிராவை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தனர்.

அவர் கொடுத்த தகவல்களின் பேரில் எலக்டரானிக் சிட்டி போலீசார் அந்த ஓட்டுநரை கைது செய்தனர். பைக் டாக்சி ஓட்டுநரின் இந்த செயல் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.