தென்காசியில்..

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது அதில் மனித எலும்புக்கூடு இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எலும்புக் கூடாக இருந்த சடலத்தை மீட்டனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து எலும்புக் கூடாக மீட்கப்பட்ட நபர் யார் அவரை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் போட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மாடசாமி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருப்பது தெரியவந்தது. அதே பகுதியைச் சார்ந்த மாரியப்பன் மகன் கல்லூரி மாணவனான மாடசாமி என்கின்ற மது காணாமல் போய் ஏழு மாதங்களானதாகக் கூறப்படுகிறது

அவரது தந்தையார் ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, லட்சுமணன் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த திருமணமான,
பேச்சியம்மாள் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரியா, அவரது தாய் மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரானான கல்லூரி மாணவன் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. மதுவிற்கும், பிரியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர்கள் தனிமையில் இருந்த போது அதை வீடியோவாக எடுத்து வைத்து,
பிரியாவை மிரட்டி மது அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் குடும்பத்தை விட்டு தன்னுடன் வராவிட்டால் வீடியோவை கணவரிடம் காட்டி விடுவேன் என்று மது மிரட்டியுள்ளார்.

இதனால் மதுவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தனது தாய், தம்பி உதவியோடு செப்டிக் டேங்கில் உடலைபோட்டுவிட்டு கோவைக்கு குடும்பத்தோடு சென்றும் தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவன் தவிர்த்து தாய், மகள் இருவரையும் செங்கோட்டை நீதிபதி சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்தனர். இரண்டு நபர்களையும் 15 நாள் சிறை அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கல்லூரி மாணவன் சிறார் இல்லத்தில் அடைக்கப்படுகிறார்.















