அண்ணனுடன் கள்ள உறவு… இளம்பெண்ணைக் குத்திக்கொன்ற தம்பி.. கொடூர சம்பவம்!!

161

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் கேஜிஎஃப் தாலுகாவில் உள் கோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி(35). கணவரை இழந்த தேஜஸ்வினிக்கு சலபதி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்தை விட்டு விட்டு தேஜஸ்வினியுடன் சலபதி வசித்து வந்ததாக தெரிகிறது.

இதை சலபதியின் சகோதரர் முரளி கண்டித்துள்ளார். அத்துடன் தேஜஸ்வினியிடம், ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைக் கெடுக்காதே என அறிவுரையும் கூறியுள்ளார். ஆனால், அதைக் கேட்காமல் சலபதி, தேஜஸ்வினி உறவு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் முரளி தனது நண்பர் ரஞ்சித் மற்றும் தனது நண்பர்களுடன் சேர்ந்து தேஜஸ்வினியை இன்று கத்தியால் குத்திக்கொலை செய்தனர். தகவல் அறிந்த பெத்தமங்கலம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேஜஸ்வினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் கொலை வழக்குப் பதிவு செய்து முரளி, ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர். தகாத உறவால் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.