கிருஷ்ணாபுரம்..

கிருஷ்ணாபுரம் ஈட்டி நகர் கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடராஜனின் தம்பி பாண்டு சென்னையில் உள்ளார்.

இந்த நிலையில் குடும்ப சொத்து குறித்து நடராஜனுக்கும் பாண்டுவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடும்ப சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாண்டு குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த நடராஜன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து புகார் அளித்தும் செங்கம் காவல்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்















