அதிதி ராவ்..

பாலிவுட் நடிகையாக வலம் வந்தாலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். அதிகமாக நடித்தது பாலிவுட் படங்களில்தான்.

தமிழில் காற்று வெளியிடை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் செக்க சிவந்த வானம், சைக்கோ, ஏ சினாமிகா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் ஒரு பாடகியும் கூட.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படத்தில் ‘காத்தோடு காத்தானேன்’ பாடலை தனுஷுடன் இணைந்து அசத்தலாக பாடியிருந்தார். ஒருபக்கம்,

இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.
















