மத்திய பிரதேசம்..

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி அர்காண்டி டவுன்ஷிப். இந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் திடீரென்று காணாவில்லை அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் சிறுமி மாயமானது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சிறுமியை தேடும் பணியை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் படுகாயத்துடன் சிறுமி கிடந்துள்ளார். பின்னர் உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் அந்த சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், உடல் முழுவதும் கடிக்கப்பட்டுள்ளது. ரத்தம் சொட்டசொட்ட படுகாயத்துடன் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் அவர் வசித்த இடத்தை சேர்ந்தவர்கள் மருத்துவமனை முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தீவிர விசாரணை நடத்திய போலீசார் ரவீந்திர குமார் ரவி மற்றும் அதுல் படோலியா என இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வந்தவர்.

மேலும் இந்த சம்பவவத்தில் சிறுமியை கடத்திய அந்த குமபல் அவரது அந்தரங்கத்தில் கடினமான பொருளைச் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் பாதிக்கப்பட்டவரின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.















