மதுரையில்..

வீட்டிலும் வெளியிலும் இவர்களைப் பற்றி முதலில் விசாரித்தபோது, ‘ரொம்ப நல்ல பசங்க’ என்றே எல்லோரும் சொன்னார்கள். அந்த அளவுக்கு யாருக்கும் சந்தேகம் வராதபடி பவ்யமாக நடந்துகொண்டிருந்தனர்.

பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டிய வழக்கில் கைதாகியிருக்கின்றனர் மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் தெரிவித்த விஷயங்களால் மதுரையே அதிர்ந்துகிடக்கிறது!

மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த 32 வயதான அங்குகுமார், 30 வயதான முத்துராஜா இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். கல்லூரிப் படிப்பை முடித்த இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே குடும்பங்கள் இருக்கின்றன. மதுரை விமான நிலையத்தில் தனியார் லக்கேஜ் பிரிவில் ஊழியராக வேலை பார்த்துவருகிறார் அங்குகுமார்.

முத்துராஜா, ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலை பார்த்துவருகிறார். ‘இவர்கள் இருவரும், வீடு, அலுவலகம், கடைத்தெரு என அனைத்து இடங்களிலும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமலேயே செல்போனில் ஆபாசப் படம் எடுத்ததாகவும், அவற்றைவைத்து மிரட்டிப் பெண்களிடம் பணம் பறித்து வந்ததாகவும்’ இருவரையும் போலீஸ் கைதுசெய்திருப்பது மதுரையை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.















