அம்மா இந்த உலகை விட்டு போகிறேன்.. வீடியோ காலில் சொல்லிவிட்டு தற்கொலை செய்த பிரபல நடிகை!!

623

அபர்ணா நாயர்..

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கரமனை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அபர்ணா நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் சஞ்சித் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அபர்ணாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கணவர் சஞ்சித்திடம் நடத்திய விசாரணையில் சில விஷயங்கள் கிடைத்துள்ளன. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அபர்ணா மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.


இந்த நிலையில்தான் அவருடைய தாயை வீடியோ காலில் தொடர்பு கொண்டார் அபர்ணா. அப்போது அழுதபடியே அவருடன் பேசியுள்ளார். அதில் தனது கணவர் தனக்கு மன ரீதியில் டார்ச்சர் செய்கிறார்.

தன்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவித்துவிட்டு இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு அபர்ணா போன் இணைப்பை துண்டித்துள்ளார். மீண்டும் அபர்ணாவுக்கு அவருடைய தாய் போன் போட்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இதனால் பதறிய அவருடைய தாய், மருமகன் சஞ்சித்திடம் விவரத்தை கூறியுள்ளார். உடனே வீட்டில் இருந்த அறைக்கு சென்று சஞ்சித் பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

அவரை கீழே இறக்கிய அவரை எழுப்ப சஞ்சித் முயற்சித்துள்ளார். ஆனால் அவர் எந்த அசைவும் இன்றி இருந்ததால் அபர்ணாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

அபர்ணா குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டுக் கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணமா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து அபர்ணாவின் தாய் பீணா கூறிகையில், அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்பது அபர்ணாவுக்கு சஞ்சித்துக்கும் மட்டுமே தெரியும். வெள்ளிக்கிழமை காலை எனக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நான் உடனே சஞ்சித்துக்கு போன் செய்து அபர்ணா எங்கே இருக்கிறாள், அவள் பாதுகாப்பாக இருக்கிறாரா என கேட்டேன். அதற்கு சஞ்சித் அவள் அறையில் இருக்கிறார். கதவு தாழிடப்பட்டுள்ளது என்றார்.

நான் உடனே நடந்ததை சொல்லிவிட்டு கதவை உடைத்து அவர் தவறான முடிவை எடுப்பதற்கு முன்பு அவரை தடுத்து நிறுத்துங்கள் என்றேன். ஆனால் என் வார்த்தையை சஞ்சித் கேட்கவே தயாராக இல்லை.

நான் போன் செய்த 30 நிமிடங்கள் கழித்துதான் அவருடைய அறைக்கு சென்று பார்த்துள்ளார். சஞ்சித் நினைத்திருந்தால் நான் போன் செய்தவுடனேயே கதவை உடைத்து அபர்ணாவை காப்பாற்றியிருக்கலாம்.

சஞ்சித் எப்போதும் குடித்துவிட்டு அபர்ணாவை துன்புறுத்தியுள்ளார். இவர்களுடைய திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருந்தது என பீனா தெரிவித்திருந்தார்.