ஆசிரியர் படுகொலை விவகாரம்… பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்: தலை துண்டிப்பதாக எச்சரிக்கை!

464

பிரான்சில்…

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் தொடர்பாக பாடசாலை ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், பிரான்சில் நகரத்தலைவர்களுக்கு மர்ம கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

அச்சுறுத்தும் இந்த கொலை மிரட்டல் லியோனில் உள்ள ஒரு பள்ளியின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. 8-வது மாவட்டத்தின் மேயர் அவர்களே, உங்கள் தலை துண்டிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, அதே பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நகரத்தலைவர் ஆலிவர் பெர்சேன், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளித்துள்ளதாகவும்,


அவற்றை எழுதியவர்கள் மீது உரிய முறையில் தண்டனை பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதுபோன்ற செயலை தண்டிக்காமல் விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது அவசியம் என்று பெர்சேன் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முன்னதாக ப்ரான் பகுதி மேயருக்கும் இதேப்போன்ற கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அவருக்கும் தலை துண்டிக்கப்படும் என்றே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆனால் அவர் குறித்த விவகாரத்தை பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.