ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி.. காரணம் என்ன?

3427

ஈரோட்டில்..

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இது புகழ் பெற்ற சுற்றுலா தளமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் அணை அருகே உள்ள பவானி ஆற்றில் ஆனைக்கல் மடுவு என்ற இடத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இடுப்பில் துப்பட்டாவால் இருக்கமாக கட்டிய நிலையில் இறந்து கிடந்த ஆண், பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட இருவரும் கணவன், மனைவியா? அல்லது கள்ள காதலர்களா, இருவரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இருவரும் திருப்பூர் மாவட்டம் செட்டி பாளையம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த ரவி மகன் சரவணன் (38) என்பதும்,


அந்த பெண் திருப்பூர் மாவட்டம் திருமுரைகன்பூண்டி அருகே உள்ள நெசவாளர் காலனியை சேர்ந்த கணேசன் மனைவி ராஜேஸ்வரி (36) என்பதும் தெரிய வந்தது. ராஜேஸ்வரிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சரவணனுக்கு நந்தினி என்ற மனைவியும் 8 மற்றும் ஒன்றரை வயதில் இரு மகன்கள் உள்ளனர். ராஜேஸ்வரியின் கணவர் வீட்டின் அருகிலேயே கறிக்கடை நடத்தி வருவதும்,

கடந்த 6 மாதங்களுக்கு முன் சரவணன், கணேசனின் கறிக்கடைக்கு சென்றபோது, கடையில் இருந்த ராஜேஸ்வரியு டன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது தெரிய வந்தது.

இவர்களது காதல் இரு வீட்டிற்கும் தெரிய வந்ததும், அவர்களை கண்டித்து உள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்துள்ளனர்.

அங்கு நீண்டநேரமாக பேசிக்கொண்டு இருந்த இருவரும், இரு குடும்பத் தினரும் சேர்ந்து வாழ அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தற்கொலை செய்து கொள்ளும் முடி வுக்கு வந்துள்ளனர்.

பின்னர் சரவணனும், ராஜேஸ்வரியும் ஒன்றாக தங்கள் உடல்களை ஒரே துணியால் கட்டி அங்கு ஓடும் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.