இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் நேர்ந்த சோகம்!!

50705

ஸ்ரீனிவாசராவ் அலபர்த்தி – சுப்ரஜா..

அமெரிக்கவாழ் இந்தியரான ஸ்ரீனிவாசராவ் அலபர்த்தி – சுப்ரஜா (33) தம்பதி அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தம்பதி தங்களது மகன் மற்றும் மருமகனுடன் விடுமுறையை கொண்டாட புளோரிடா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் நிர்வாகம் ‘பாராசெய்லிங்’ விளையாடுவதற்காக கடற்கரைக்கு அழைத்துச் சென்றது. சுப்ரஜா மற்றும் அவரது மகன், மருமகன் ஆகியோர் பாராசூட்டில் பறக்க முடிவுசெய்தனர்.

இதனையடுத்து பாரசூட்டில் பறக்க படகு ஒன்றில் கயிறு மூலம் இழுத்துச் சென்றது. ஆனால், ஒருகட்டத்தில் மோசமான வானிலை காரணமாக காற்றின் வேகத்தில் படகிலிருந்து கயிறு துண்டிக்கப்பட்டது.


இதனால் வானில் பறந்த பாராசூட்டி கடலில் விழுந்தது. அதில் தொங்கிய சுப்ரஜா அவரது மகன், மருகன் ஆகிய மூவரும் தவித்தனர். மூவரையும் காப்பாற்ற பாராசெய்லிங் ஏற்பாட்டாளர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

இதனால் சுமார் இரண்டு மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் இறுதியாகக் கடற்கரை பாலத்தின் கான்கிரீட் தூணில் மோதினர். இதில் சுப்ரஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது.

இந்த விபத்து தொடர்பாக சுப்ரஜாவின் கணவர் அலபர்த்தி வழக்கு தொடர்ந்தார். வானிலை மோசமாக இருந்த சமயத்தில் பாராசெய்லிங்கை இயக்கியதாகவும், விபத்தின்போது தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற முயற்சி எடுக்காமல் இருந்ததாகவும் சம்பந்தப்பட்ட ரிசார்ட் நிர்வாகம் மீது ரீனிவாசராவ் குற்றஞ்சாட்டினார்.

இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் விசாரித்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, கவனக்குறைவாகச் செயல்பட்ட பாராசெய்லிங் ஏற்பாட்டாளர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.