இந்த 10 உணவுகளை காலையில் சாப்பிட்டால் போதும் உடல் எடை எளிதில் குறையும்!

943

காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். அதேபோல எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளையும் காலையில் தவிர்ப்பது நல்லது.

உடல் எடையை குறைக்க முடிவெடுத்த பலருக்கும் எந்த உணவுகளை சாப்பிடுவது, தவிர்ப்பது என்பதில் பெரும் குழப்பம் நீடிப்பது சகஜம். காலையில் சாப்பிடும் உணவு என்பது டயட் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒன்று.

காலை ஆரோக்கியமான உணவுடன் ஆரம்பித்தால் தான் அன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உடல் எடையும் குறைய வேண்டும், அதே நேரம் ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தது போன்ற 10 காலை உணவுகள் பற்றி பாக்கலாம்.

உடல் எடையை குறைக்க முடிவெடுத்த பலருக்கும் எந்த உணவுகளை சாப்பிடுவது, தவிர்ப்பது என்பதில் பெரும் குழப்பம் நீடிப்பது சகஜம். காலையில் சாப்பிடும் உணவு என்பது டயட் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒன்று. காலை ஆரோக்கியமான உணவுடன் ஆரம்பித்தால் தான் அன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உடல் எடையும் குறைய வேண்டும், அதே நேரம் ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தது போன்ற 10 காலை உணவுகள் பற்றி பாக்கலாம்.

முட்டை

உடல் எடையை குறைக்க புரோட்டீன் அதிகம் தேவை. காலை 2 அல்லது 3 முட்டைகளை நமக்கு பிடித்தது போல சமைத்து சாப்பிடலாம். ஆம்லெட் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து பொறியல் போலவும் சாப்பிடலாம். அதிக எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ள முட்டை அதிக நேரம் பசி உணர்வையும் தூண்டாமல் இருக்கும்.


வாழைப்பழம்

பலரும் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கும் என நினைப்பது உண்டு. ஆனால் உண்மை அல்ல இது. உடற்பயிற்சி செய்யும் முன் இதை சாப்பிட்டால், அதிக நேரம் சோர்வடையாமல் பயிற்சிகள் செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள பொடாசியம் போன்ற சத்துகள் எடையை கட்டுப்படுத்தும். ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும்.

 

காலையில் சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். ஆனால் பொங்கல், பூரி என சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். அதற்கு பதில் ஓட்ஸ் பயன்படுத்தி காலை உணவை தயாரிக்கலாம். நார்சத்து நிறைந்த இதில் உடல் எடையை கட்டுப்படுப்படுத்தும் சக்தி உள்ளது. மெடபாலிசியம் அதிகரிக்கவும் ஓட்ஸ் உதவுகிறது.

தயிர்

பாலுக்கு பதில் தயிரை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இதில் உள்ள ப்ரோ பயோடிக்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து தயிர் சாப்பிடுவதால் பல நன்மைகளும் கிடைக்கும். ஆனால் சர்க்கரை கலந்த தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம். காலையில் பழம் சாப்பிட்டால் மதிய உணவுக்கு முன் ஸ்நாக் போல தயிர் சாப்பிடலாம்.

கிரீன் டீ

பால் டீ குடிப்பது என்பது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்லது அல்ல. ஆனால் கட்டாயம் டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் காலை கிரீன் டீயுடன் தொடங்கலாம். அதேபோல 16:8 டயட் இருப்பவர்கள் காலையில் கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். கிரீன் டீயுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

நட்ஸ்

பேலியோ டயட் இருப்பவர்கள் ஒருவேளை உணவாக நட்ஸ் எடுத்து கொள்வார்கள். அதில் உள்ள கொழுப்பு உடம்பிற்கு நன்மைகளை அளிக்கும். காலையில் கை நிறைய பாதாம், பிஸ்தா, வால்நட் சாப்பிடுவதால் அதிக எனர்ஜி கிடைக்கும். காலை உணவு சாப்பிட நேரம் இல்லாதவர்கள் கூட ஒரு டப்பாவில் இதை எங்கு சென்றாலும் எடுத்துச் சென்று சாப்பிடலாம்.

வேர்கடலை பட்டர்

சமீபகாலமாக இந்த பீனட் பட்டர் உடல் எடை குறைக்க நினைப்பவர்களின் டயட்டில் இடம் பெற்று வருகிறது. சுவை என்பதை தாண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல நன்மைகளை அளிக்கிறது. புரோட்டீன், ஆண்டி ஆக்சிடன்ஸ், வைட்டமின், மினரல்ஸ் என பல சத்துகள் உள்ளன. அளவோடு இதை பிரவுன் பிரட்டில் தடிவி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இட்லி

பலரும் இட்லி சாப்பிடுவதை டயட் சமயத்தில் தவிர்ப்பார்கள். ஆனால் ஆவி கட்டி வேகவைக்கப்படும் இட்லி உடல் எடையை குறைக்க உதவும். ஆனால் அதன் உடன் சட்னி, சாம்பார் என அதிகம் எடுக்கக் கூடாது. வைட்டமின் பி அதிகம் கொண்ட இட்லிக்கு புதினா அல்லது தேங்காய் சட்னியை கொண்டு சாப்பிடலாம்.

ஆப்பிள்

காலையில் ஆப்பிள் சிறந்த உணவு. ஆப்பிளை கழுவி அதன் தோலை நீக்கி சாப்பிடலாம். இரண்டு ஆப்பிள் ஒரு வேளை உணவுக்கு சமம். மருத்துவ குணங்கள் நிறைந்த ஆப்பிள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.

சக்கரவள்ளி கிழங்கு

அதிக நார்சத்து கொண்ட சக்கரவள்ளி கிழங்கு ஜீரண உறுப்புகளை நன்றாக இயக்க உதவும். வயிற்றில் உள்ள நச்சுகளை நீக்கும். இதை அப்படியே வேகவைத்தோ அல்லது பொறியல் போல செய்தோ சாப்பிடலாம்.