இனி விமானங்களில் இதற்கு தடை: அனைத்து விமான நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை!!

802

விமானங்களில் இதற்கு தடை……

விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், 1937 விமான விதிகளின் 13வது விதிப்படி, விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் பொது இயக்குனர், துணை பொது இயக்குனரிடம் அனுமதி பெற்றவர்களை தவிர, பயணத்தின் போது யாரும் விமான நிலையத்திலோ அல்லது விமானத்திலோ புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

எனினும், விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் பொது இயக்குனர், துணை பொது இயக்குனரிடம் பெற்ற அனுமதியும் விமானம் புறப்படும் போதோ, தரையிறங்கும் போதோ புகைப்படம் எடுக்க பொருந்தாது.


விமானத்தில் பயணிகள் விதிமீறலால் ஈடுபட்டால் குறிப்பிட்ட வழித்தடத்தில் 2 வாரம் அந்த விமானத்தை இயக்க தடை விதிக்கப்படும். அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எழுதியுள்ள கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.