இன்றைய ராசிபலன் (02-06-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1748

இன்றைய ராசிபலன்…

மேஷம்

குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

ரிஷபம்


குடும்பத்தில் ஒற்றுமைபிறக்கும். இதமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். பூர்வீகசொத்து பிரச்சினைகளில் ஒன்று தீரும்.உங்களால் பயனடைந்தவர் கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களை. தேடி வந்து பேசுவார்கள். இன்பம் பெறும் நாள்.

மிதுனம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர் களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங் கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கன்னி

பிரச்சனைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

குடும்பத்தாரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில்நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்பு களை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதி கரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோ
கத்தில் அதிகாரிகள் வலிய வந்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகர மாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் முழுகும் நாள்.

மகரம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள் . அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றங்களும் வந்து போகும். நெருங்கியவர்களிடம் உங்கள் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.