இன்றைய ராசிபலன் (18-08-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

369

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்கள் விரும்பியது கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் சோர்வு காணப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன் உண்டு.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் பல நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியே அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைத்து அமைதி ஏற்படுத்தும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலமான நிகழ்வுகள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் மூலம் லாபம் உண்டு. உற்றார் மற்றும் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். லஷ்மி தேவி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். எதிலும் எச்சரிக்கை மனப்பான்மையுடன் செயலாற்றுவது வீண் விரயத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்கலாம். தக்க சமயத்தில் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நல்ல அமைப்பாக இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபகரமான நாளாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் தடங்கலின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று கைகூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான அமைப்பு என்பதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் நன்மைகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான அமைப்பு என்றாலும் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயத்தில் அதிக பணத்தை ஈடுபடுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் குதூகலம் சம்பவங்கள் நடைபெறும். வேலையில் நிம்மதி இருக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இழுபறியாக இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மற்றவர்களினால் அதிக கோபம் வரக் கூடிய அமைப்பாக உள்ளது. எனினும் உங்களை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நன்மைகளைத் தரும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வணங்குவது நல்லது.