இன்றைய ராசிபலன் (19-08-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

405

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே அனுகூலப் பலன் கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியிட பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை தேடி வீண் பிரச்சினைகள் வரலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும்.